அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
விருதுநகர் அருகே எட்டூர் வட்டம் சுங்கச்சாவடி சாவடி அருகே தனியாருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று பாதி அளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பதாக அருகில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :