என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - ஓபிஎஸ்

by Staff / 23-04-2024 12:46:17pm
என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - ஓபிஎஸ்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் எனக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள். 10 ஆண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories