அ.தி.மு.க சேர்மன் தி.மு.க.வில் ஐக்கியம் 

by Editor / 22-03-2023 09:57:13pm
அ.தி.மு.க சேர்மன் தி.மு.க.வில் ஐக்கியம் 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி 2 வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக போட்டியிட்டு  வெற்றி பெற்றவர் சுயேட்சை உறுப்பினர் ராமலட்சுமி. இவர் இதற்கு முன்பு காங்கிரஸ், மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ், ஆகிய கட்சிகளின் போட்டியிட்டு நகர்மன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக  போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் நகர்மன்றத் தலைவராக அதிமுகவின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்த நிலையில் ராமலெட்சுமியை தலைவராக தேர்ந்தெடுக்க விடக்கூடாது என்பதற்காக திமுகவுக்கும் அதிமுகவிற்கும் கடுமையான வாக்குவாதம் மோதல் செங்கோட்டை நகர மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் எஸ் எம் ரஹீம் வாக்குச்சீட்டுகளை கிழித்தெறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ,உள்ளே, கூட்டரங்கில் மோதல்கள் ஏற்படும் சூழலும் உருவானது. இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற  குட்டியப்பா தலைமையில் அதிமுகவினர்  பெரும் திரளாக திரண்டு வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, தென்காசி மாவட்ட அன்றைய காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் பலத்த போலீசார் குவிக்கப்பட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  நகர் மன்ற தலைவராக அதிமுக சார்பில் ராமலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதிமுகவினுடைய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட  ராமலட்சுமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரையும் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்  இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ .பத்மநாதனை நேரில் சந்தித்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு வந்த. அவர் திமுகவில் இணைந்து விட்டதாக புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் , தான் திமுகவில் இணையவில்லை. அதிமுகவில் தான் தொடர்வதாக தெரிவித்தார் ராமலட்சுமி.  இந்த நிலையில் நகரமன்ற அலுவலகத்திற்கு வந்த தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தனுஷ் குமார் ஆகியோர் நாகூர் மன்ற தலைவரை சந்தித்து நகரமன்றத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்து ஆலோசனை செய்துவிட்டு சென்றனர். அதன் பின்பும் இவர் திமுகவில் உறுதியாக இணைந்து விட்டார் என்கின்ற தகவல் வேகமாக பரவியது இந்த நிலையில் அதனையும் மறுத்த அவர் இன்று  சென்னையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை  சந்தித்து தன்னை அதிமுகவில் இருந்து விலக்கி திமுகவில் இணைந்து கொண்டார். 

 

Tags :

Share via