வழிப்பறி வழக்கில் ஈடுப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது 

by Editor / 22-03-2023 10:03:14pm
 வழிப்பறி வழக்கில் ஈடுப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது 

 ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லூர் சாலை பகுதியில் கடந்த 20.02.2023 அன்று நின்றுகொண்டிருந்த ஆறுமுகநேரி பேயன்விளை பகுதியை சேர்ந்த வல்லாள மகாராஜன் மகன் சுடலைமுத்து (34) என்பவரை அரிவாளால் தாக்கி அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற வழக்கில் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியை சேர்ந்த முத்துசெல்வம் மகன் சாரதி (21), மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரிய யோஸ்வின் (21) மற்றும் காயல்பட்டினம் அருணாசலபுரத்தை சேர்ந்த மகராஜன் மகன் திருமூர்த்தி (26) ஆகியோரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான சாரதி, மரிய யோஸ்வின் மற்றும் திருமூர்த்தி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்க்கு பரிந்துரை செய்தார்.அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  3 எதிரிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர்  செந்தில் மேற்படி 3 நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

 

Tags :

Share via
Logo