யூனிஸ் புயல் தாக்கத்தால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை 13 பேர் பலி

by Admin / 20-02-2022 01:57:31pm
 யூனிஸ் புயல் தாக்கத்தால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை  13 பேர் பலி

கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  

யூனிஸ் புயல் காரணமாக  ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து, ரெயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 
 
யூனிஸ் புயலின் தாக்கம் நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் எதிரொலித்தது. யூனிஸ் புயலால் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், யூனிஸ் புயலால் ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அயர்லாந்து, பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் புயலின் தாக்கத்தால் மரங்கள் சாய்ந்துள்ளன.
 

 

Tags :

Share via