ஜெர்மனியர்கள் வெளியேற வேண்டும் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

by Admin / 20-02-2022 01:53:31pm
ஜெர்மனியர்கள் வெளியேற வேண்டும் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்து இருக்கிறது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் படையெடுக்கலாம் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.

எல்லையில் இருந்து படைகள் திரும்பப் பெறப்படுவதாக ரஷ்யா அரசு அறிவித்தாலும் அதனை அமெரிக்கா, உக்ரைன் ஏற்கவில்லை.

உக்ரைனில் போர் பதட்டம் தொடர்ந்தபடி இருப்பதால், அங்கிருக்கும் வெளிநாட்டினர் வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.

அதன்படி, அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து ஜெர்மனியர்கள் வெளியேற வேண்டும்  என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் நாட்டுக்கு ஜெர்மனியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம். 

கியூ நகருக்கு சென்று வரும் லூப்தான்சா விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இதேபோல், கார்கிவ், லுஹான்ஸ்க் மற்றும் டானெட்ஸ்க் நகரங்களில் வசிக்கும் குடிமக்களை வெளியேறும்படி பிரான்ஸ் நாடும் வலியுறுத்தியுள்ளது. 

 

Tags :

Share via