எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக் கொண்டோம் -மீனவ மக்கள்.

by Editor / 08-12-2023 10:34:55pm
எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக் கொண்டோம் -மீனவ மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அண்ணா மலைச்சேரி சிறிய மீனவ கிராமான இந்த கிராமத்தில் 3000 பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலும் மீனவர்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னால் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் இந்த பகுதி மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஒரு தீவு போல இருக்கும் இந்த மீனவ கிராமத்தில் ஐந்து நாட்களாக தடைப்பட்ட மின்சாரத்தை அளிப்பதற்கு மின்சார ஊழியர்கள் வராத நிலையில் ஊர் மக்கள் ஒன்று திரண்டு ஒரு லட்சம் ரூபாய் நிதி திரட்டி தங்கள் கிராமத்திற்கு மின் இணைப்பை மீண்டும் கொண்டு வந்தனர் அனைத்து பின் பணிகளை இந்த கிராம மக்களே செய்த பின் மின் இணைப்பிற்கு மட்டும் மின்சார ஊழியர் வந்ததாக கூறுகின்றனர்.

மேலும் 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்ததாகவும் 16 படகுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறும் இவர்கள் இதுவரை தங்களுக்கு உணவு குடிநீரோ யாரும் அழிக்கவில்லை எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக் கொண்டோம் என்று இந்த மீனவ மக்கள் புயலில் சேதாரத்தை எதிர்த்து தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொண்டு இருக்கின்றனர்.

 

Tags : எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக் கொண்டோம் -மீனவ மக்கள்

Share via