காவல்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு

by Staff / 01-08-2024 12:43:38pm
காவல்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு

புதிய காவலர் குடியிருப்புகள், காவல் நிலைய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காவல்துறை சார்பில் ரூ.47.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 53 காவலர் குடியிருப்புகள், 6 காவல்நிலைய கட்டடங்கள், 2 காவல் துறை கட்டடங்கள் உள்ளிட்ட புதிய கட்டடங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

 

Tags :

Share via