குழந்தைகளின் சடலங்களை அடையாளம் காண ஆசிரியர்கள் வரவழைப்பு

by Staff / 01-08-2024 12:22:01pm
குழந்தைகளின் சடலங்களை அடையாளம் காண ஆசிரியர்கள் வரவழைப்பு

முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் மீட்கப்பட்ட குழந்தைகளின் சடலங்கள், அங்குள்ள அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் உதவியுடன் அடையாளம் காணப்படும் பெரும் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தைகளின் பெற்றோர் நிலை என்னவென்று தெரியாத சூழலில், சடலங்களை அடையாளம் காண ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வயநாடு நிலச்சரிவில் இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via