புதுமைப்பெண் திட்டம் மற்றும் 26தகைசால் பள்ளிகள்,15 மாதிரிப் பள்ளிகள் தொடக்க விழா
புதுமைப்பெண் திட்டம் மற்றும் 26தகைசால் பள்ளிகள்,15 மாதிரிப் பள்ளிகள் தொடக்க விழாவை தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தொடங்கி வைத்து உரைநிகழ்த்தினார். டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெகுவாகப் பாராட்டிப் பேசினார் .நிகழ்வில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் .பொன்முடி ,அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டனர்.மூவலூர் ராமாமிர்த அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு 698 கோடி செலவில்இத்திட்டம் செயல்படுத்த உள்ளதாக 2022-23 வரவு- செலவு கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தின்மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
Tags :