தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்.

by Admin / 12-06-2026 12:08:51pm
தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்.

தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்.

தாய்லாந்து இளவரசி மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்த நிலையில் தனது 47 ஆவது வயதில் காலமானதாக தாய்லாந்து அரசு அரண்மனை அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 2022 இல் தன் நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த பொழுது இதய நோயின் காரணமாக அவர் திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் கோமா நிலைக்கு சென்றார் இதன் காரணமாக அவர் தொடர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த அவருக்கு வயிற்றுப் பகுதியில் கடுமையான தொற்று ஏற்பட்டு மற்ற உறுப்புகளும் செயல் இழந்ததன் காரணமாக நேற்று இரவு 7 48 மணிக்கு பாங்காக் மருத்துவமனையில் காலமானார்.

தாய்லாந்து மன்னரின் மூத்த வாரிசாக திகழ்ந்தவர். அமெரிக்க கார்னல் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பிஹெச்டி பட்டம் பெற்றவர். தாய்லாந்தில் வழக்கறிஞராகவும் தன் பணியை தொடங்கியவர். ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளுக்கு தூதராகவும் ஐநா சபையில் முக்கிய பொறுப்புகளிலும் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சமூக சீர்திருத்த பணிகளையும் இவர் தொடர்ந்து செய்து மக்களிடம் நன் மதிப்பை பெற்று இருந்த அவரது பூத உடல் அரண்மனையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முழு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அரண்மனை தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது .

தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்.
 

Tags :

Share via
Logo