ஈரான் மீது வான்வழி தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நடத்திய வான்வழி தாக்குதலை புதிய ராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுற்றுவழ்த்தியதற்கு பதிலடியாக அமெரிக்க வான்படை மற்றும் கடற்படை விமானங்கள் ஈரானின் ஏவுகணை எதிர்ப்பு தளங்கள் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு ரேடாரர்களை குறி வைத்து கடுமையாக வான்வழி தாக்குதல்களை ஜூன் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடத்தியது .இந்நிலையில் தற்பொழுது வான்வழி தாக்குதலை நிறுத்தி வைத்திருப்பதாக அமெரிக்க அறிவித்து உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானின் மிக உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதின் காரணமாக இந்த தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது .
ஈரானின் முக்கிய எரிசக்தி மற்றும் எண்ணை உள்கட்டமைப்புகள் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை அடுத்து ஐந்து நாட்களுக்கு தள்ளி வைக்குமாறு பாதுகாப்பு துறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். ஈரான் மீது இரண்டு நாட்கள் தொடுத்த வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் அமெரிக்க படைகள் தங்கி இருக்கும் குவைத் பக்ரைன் ஜோர்டான் ஆகிய இடங்களை ஏவுகணை தாக்குதல்களை கொடுத்திருந்தது. இந்நிலையில்தான் இந்த பேச்சுவார்த்தை அதிக ஈடுபாட்டோடு நடத்தப்படுவதால் தற்காலிகமாக தாக்குதல்நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
Tags :



















