“உணவுப் பாதுகாப்பிற்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை”.. ராமதாஸ் வலியுறுத்தல்
“குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் அதன் தாக்கம் காரணமாக உணவு தானிய உற்பத்தி குறையும் அபாயம் ஏற்படும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், ‘தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுடனும் கர்நாடக அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும், டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Tags :



















