மக்களை, நீங்கள் சொல்லுங்கள், நான் அரசியலுக்கு வரவா வேண்டாமா? ராகவா  லாரன்ஸ் வீடியோ வெளியீடு

by Admin / 12-06-2026 11:41:08am
மக்களை, நீங்கள் சொல்லுங்கள், நான் அரசியலுக்கு வரவா வேண்டாமா? ராகவா  லாரன்ஸ் வீடியோ வெளியீடு

மக்களை, நீங்கள் சொல்லுங்கள், நான் அரசியலுக்கு வரவா வேண்டாமா? என்று பொதுமக்களிடம் கருத்து கேட்டு நடிகரும் நடன இயக்குனருமான ராகவா  லாரன்ஸ் தன் அரசியல் வருகை குறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தாம் அரசியலுக்கு செல்ல வேண்டும் என்று தன்னுடைய அம்மாவிடம் கேட்ட பொழுது அரசியல் ஒரு சாக்கடை என்று சொன்னதனால் ஒதுங்கி இருந்ததாகவும் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதால் அவரோடு பங்காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன் ரஜினி என்னை வாழ வைத்த தெய்வம் எனக்கு கடவுள் போன்றவர் என்றும் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் அவரோடு சேர்ந்து பணியாற்றலாம் என்று நினைத்திருந்தேன் நானும் அவரும் நல்ல நண்பர்கள் ரஜினி விஜய் இருவருக்கு மட்டும்தான் நான் தனியாக நடனங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். நான் யாருடன் இணைந்து அரசியலில் பயணிக்க வேண்டும் என்று மக்கள் சொன்னால் அதன்படி நான் செயல்படுவேன் என்றும் ஒரு காலகட்டத்தில் என்னுடைய டிரஸ்ட் பிள்ளைகளுக்காக நான் ரஜினி விஜய் போன்றவர்களிடம் மருத்துவ உதவிக்கு பணம் பெற்று இருக்கிறேன் காஞ்சனா ஜிகிர்தண்டா போன்ற படங்களுக்குப் பிறகு என்னிடமே நிறைய பணம் வந்ததனால் நான் யாரிடமும் இப்பொழுது பணம் வாங்குவதில்லை அதனால் டிரஸ்டில் கவனம் செலுத்தி வந்த நான் இனி அரசியலிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நினைத்தால் அதை சொல்லட்டும் நான் அவர்கள் சொல்வதை கேட்டு அரசியலில் இறங்குவேன் என்கிற விதமாக தன்னுடைய வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo