வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் கொரோனா நிவாரண நிதி ரூ.10 லட்சம்
வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர். இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் அளித்தனர்.
வில்லேஜ் குக்கிங் சேனலை (Village Cooking Channel) தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி - சமையல்காரர்கள் குடும்பத்தினர் 5 பேர் நடத்துகின்றனர்.
இந்த சேனலை சின்ன வீரமங்கலம் ஏப்ரல் 2018 இல் தொடங்கினார், மேலும் அவரது பேரக்குழந்தைகளான முருகேசன், தமிழ்செல்வன், அய்யனார், முத்துமணிக்கம் மற்றும் சுப்பிரமணியன் மற்றும் பெரியதம்பியும் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இவர்களுடன் இணைந்து சமைத்து, சாப்பிட்டு மகிழ்ந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதிலிருந்து இந்திய அளவில் பிரபலமான சேனலாக வில்லேஜ் குக்கிங் சேனல் உருவாகியுள்ளது.
Tags :