ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில்பதக்கம் பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் மூக்குத்தொகை வழங்கியதோடு அவர்களுக்கு முதலமைச்சர் விருந்தும் வழங்கி கௌரவப்படுத்தினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு 75 லட்சம் வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு 50 லட்சம் வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு முப்பது லட்சமும் ஊக்க தொகையாக வழங்கப்பட்டது மொத்தம் 32 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பாரா விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.இவ்விழாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்களை ஊக்கப்படுத்தும் முகமாக ஒரு புதிய திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் திட்டத்தின் படி தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு ஆண்டுக்கு 50 லட்சமும் மாதம் தோறும் ஒரு லட்சம் உதவி தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















