ஐபேட் மற்றும் மேக்புக் தயாரிப்புக்கு உதவிக்கரம் நீட்டும் சாம்சங்

by Staff / 07-06-2022 05:03:58pm
ஐபேட் மற்றும் மேக்புக் தயாரிப்புக்கு உதவிக்கரம் நீட்டும் சாம்சங்

ஆப்பிள் நிறுவனத்தில் ஐபேடுகள் மற்றும் மேக்புக்குகளுக்கு ஏற்றவாறு பெரியடிஸ்பிளேக்களை சாம்சங் நிறுவனம் தயாரித்து சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்கால ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ஆர்டர்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு சாம்சங் நிறுவனம் இத்தகைய முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம்டிஸ்பிளேக்களுடன் கூடிய அதன் முதல் ஐபேட் புரோ மாடல்களை வருகிற 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாடல்களுக்கு தான் சாம்சங் நிறுவனம் டிஸ்பிளேக்களை தயாரிக்க உள்ளதாம். ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபேட் மற்றும் மேக்புக் டிஸ்பிளேக்களை மினி-LED டிஸ்பிளேக்களாக கடந்தாண்டு மாற்றியது, விரைவில் வர உள்ள டிஸ்பிளே அதன் அடுத்த கட்டமாக இருக்கும் என தெரிகிறது.
 

 

Tags :

Share via

More stories