நிலக்கரி சுரங்கத்தில் விபத்து.. 28 பேர் பலி
மத்திய கஜகஸ்தானின் கோஸ்டென்கோ நிலக்கரி சுரங்கத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விபத்தில் குறைந்தது 28 பேர் இறந்ததாகத் தெரிகிறது. மேலும் 18 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அந்நாட்டு அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், தாய் நிறுவனமான ArcelorMittal Temirtau, நிலக்கரிச் சுரங்கத்தில் 252 பேர் வேலை செய்து கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாகவும், மீத்தேன் வாயு பரவியதால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது. தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றது.
Tags :



















