தமிழர்கள் மறந்து போன உணவு

by Admin / 12-11-2023 04:10:46pm
 தமிழர்கள் மறந்து போன உணவு

இன்று தீபாவளி பண்டிகை... இந்த பண்டிகையில் நாம் மறந்து போன உணவு பற்றி யோசிப்பது மிக முக்கியமானது.. இன்று  தெருக்குத்தெரு பிரியாணி கடைகள் அதிக அளவில் திறக்கப்பட்டு அமோக விற்பனையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கின்ற சூழலில்..... தமிழர்கள் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், திருமணம் மறு விருந்து காலங்களில் மற்ற விசேஷமான நாட்களில் அசைவ உணவு என்று வந்தால், பருப்பு சோறும் கோழிக்கறியும் மிக விசேஷமாக, இன்றைக்கு பிரியாணி இருந்த இடத்தை இந்த உணவு முக்கிய இடத்தை பிடித்திருந்தது.. அடுப்பில் உலைகொதித்துக் கொண்டிருக்கிற பொழுது அரிசியோடு கலந்து உடைபட்ட கருப்பு உளுந்தையும் உரிக்கப்பட்ட பூண்டையும் உலையிலே போட்டு, பெரிய துடுப்பால் கிண்டிக்கொண்டே இருப்பார்கள். அந்த சாதமானது... கட்டித் தன்மையோடு... இறுகிப் போகிற வரை.... அதை கிளறிக் கொண்டு... அடுப்பில் இருந்து இறக்கி வைத்து... மூடி வைக்க.... அது கொஞ்ச நேரத்தில், இறுகிவிடும்., நாட்டு கோழியை தோளெல்லாம் உரித்த பிறகு நல்லா மஞ்சள் தடவி தீயில் வாட்டி கோழியை அறுத்து பதப்படுத்திய பிறகு.... அம்மியில் வைத்து நீளம் மிளகாய்- தனியா- மிளகு- சீரகம் எல்லாவற்றையும் மசிய அறைத்த பின்பு தேங்காயை அதிக அளவில் வைத்து அரைத்து நாட்டுக்கோழிசட்டியில்  தரதர என்று கொதித்து வருகிற பொழுது ,இந்த மசாலாவை அதில் எட்டு குழம்பு பக்குவமாக வரும் பொழுது.... அதிகமான நல்லெண்ணையை விட்டு ...குழம்பை கிளறி ...தாளிசம் பண்ணி.. இந்த கெட்டிச் சோரையும் கோழி குழம்பையும் தொட்டு சாப்பிடுற... கிராமத்து மக்கள் மிக மகிழ்ச்சியோடு, எந்தவிதமான பாதிப்பும் தொந்தரவும் இன்றி சாப்பிட்ட உணவு தான்.... பருப்பு சோறும் கோழிக்கறியும்.... இன்றைக்கு அது சுத்தமாக, நம் தமிழர்களுடைய அதுவும்,,,, தென்பகுதியில் mமதுரைக்கு தெற்கே உள்ள பகுதியில் மிக மிக அதிகமாக தயார் செய்யப்பட்ட உணவு. இன்று வழக்கத்தில் இல்லாமலேயே போய்விட்டது. அதற்கு அடிப்படை காரணம் பிரியாணி தான். 50 ஆண்டுகளுக்கு முன்பும் அசைவ உணவு ஹோட்டல்களில் பிரியாணி இருக்கத்தான் செய்தது. ஆனால், ஒரு கிலோ- அரை கிலோ என்ற அளவில் தான் அந்த உணவு கூடத்தில் பிரியாணி தயார் செய்யப்பட்டது. ஆனால், இன்றைக்கு பிராய்லர் கோழியினுடைய வரவுக்கு பின்பு ...பிரியாணி தெருவிலிருந்து ஹோட்டல்கள் வரை.... அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறையினர் அதிகமாக விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக பிரியாணி உள்ளது .சமீப காலங்களில் முதல் இடத்தில் உணவு வகைகளில் இருப்பது பிரியாணி மட்டுமே.. இதனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ளவர்கள்  பருப்பு கட்டிச்சோறும் கோழி குழம்பு இல்லை... கருவாட்டு குழம்பு சாப்பாடு.... தயார் செய்கிற நிலையும் இல்லாமல் போய்விட்டது. அந்த சாப்பாடை சாப்பிடுகிற பாக்கியமும் ,இந்த தலைமுறையிருக்கு இல்லாமல் போய்விட்டது. தமிழர்கள் தங்களுடைய உணவு பழக்கத்தை இழக்காமல்..... மீண்டும்.. ஒவ்வொரு வீட்டிலும் இந்த உன் சோறு தயார் செய்யப்பட வேண்டும் .ஆரோக்கியமான இந்த உணவு, நம் உடலை பாதிக்காமல் பக்குவப்படுத்தும்.

 

 

Tags :

Share via