காங்கிரஸ், பாஜக என இரண்டு தேசிய கட்சிகள் துரைவைகோ மீது புகார் .

by Editor / 16-05-2022 08:11:21pm
காங்கிரஸ், பாஜக என இரண்டு தேசிய கட்சிகள்  துரைவைகோ மீது புகார் .

துரை வைகோ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி அங்கபிரதட்சனை செய்து போராட்டம் - பா.ஜ.க காவல் நிலையத்தில் புகார்

பிரதமர், ஆளுநர் ஆகியோரை மிரட்டும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ பேசியுள்ளதாகவும், அவருக்கு பின்னல் விடுதலை புலிகள் இயக்கம் இருப்பது சந்தேகத்தினை ஏற்படுத்துவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகி வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் அங்கபிரதட்சனை செய்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதே போன்று துரைவைகோ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

தூத்;துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் துரைவைகோ செய்தியாளர்களிடம் பேசும் போது ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது தமிழக மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் தமிழக ஆளுநர், பிரதமர் என யார் ஈடுபட்டாலும் இங்கு ராணுவே வந்தாலும் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு கிடையாது என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் துரைவைகோவின் கருத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பது மட்டுமின்றி, பிரதமர், ஆளுநர் ஆகியோரை மிரட்டும் தோனியில் இருப்பதாகவும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு இது போன்ற பேச்சுகள் பேசிய போது கண்டுகொள்ளவில்லை என்பதால், ஒரு துயரமான நிகழ்வு நடைபெற்றது. அதே போன்று தற்பொழுது துரைவைகோ அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார். இந்த அச்சுறுத்தலை சாதரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. அவருக்கு பின்னால் விடுதலைப்புலிகள் இயக்கம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. தமிழகத்தினை மையமாக வைத்து விடுதலைப்புலிகள் செயல்பட வாய்ப்பு இருப்பது போன்ற தோற்றம் துரைவைகோ பேச்சில் இருந்து வெளிப்படுகிறது.எனவே அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு;ம், மேலும் இது போன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு ஆதவராக பேசி வரும் அரசியல் தலைவர்கள் பேச்சினை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கபிரதட்சணை செய்து மனு அளித்துள்ளார்.

இதற்கிடையில் துரைவைகோ பேச்சு பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும்,  வரும் 26ந்தேதி பிரதமர் மோடி தமிழகத்துக்கு வர உள்ள நிலையில் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் துரை வைகோ பேசியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் நீதி பாண்டியன் என்பவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். 

காங்கிரஸ், பாஜக என இரண்டு தேசிய கட்சிகள் அடுத்தடுத்து மதிமுக துரைவைகோ மீது புகார் அளித்துள்ளதால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

 

Tags : Two national parties, the Congress and the BJP, have complained about Duravaiko.

Share via