மணல் கடத்தலில் கத்தோலிக்க பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்கள் கைது

by Editor / 10-02-2022 12:09:36am
மணல் கடத்தலில்  கத்தோலிக்க பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்கள் கைது

கேரளாமாநிலத்தில்  ஆற்று மணல் அள்ளுவதற்கு  கடுமையான கட்டுப்பாடு உள்ளது.இயற்கைவளத்தை  துளியளவும் அங்கு தொட்டுவிடமுடியாத அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஜல்லிக்கற்கள்,குண்டுக்கல்,எம் சாண்ட் மணல் உள்ளிட்டவைகள் கேரளாவுக்கு கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கொண்டு செல்லப்பட்டுவருகின்றது.தென்காசிமாவட்டம் வழியாக தற்போது 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஜல்லிக்கற்கள்,குண்டுக்கல் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

இதனைத்தொடர்ந்து எம்.சாண்ட் என்ற பெயரை பயன்படுத்தி  கேரளமாநிலத்தை சேர்ந்த பாதிரியார்கள் சிலர் சேர்ந்து,கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி நதிக்கரையோரம்  எம் சாண்ட் எனும் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி அரசிடம் அனுமதி பெற்று முழுக்க முழுக்க தாமிரபரணி நதியின் ஆற்று மணலை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பிரச்சினையான நிலையில்,  2021 ஜூலை மாதம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

இதையடுத்து களத்தில் இறங்கிய சிபிசிஐடி.துறையினர், பாதிரியாளர்கள் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். சுமார் 27 ஆயிரம் டன் கியூபிக் ஆற்று மணல் கடத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, நவம்பர் 29, 2019 முதல் நவம்பர் 28, 2024 வரை பொட்டல் கிராமத்தில் உள்ள  ஒரு தடுப்பணையை ஒட்டியுள்ள 300 ஏக்கர் நிலத்திற்கான உரிமத்தைப் பெற்று, பட்டா நிலங்களில் ஆற்று மணல் அள்ளும் பணியில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்த ஆற்று மணல் முழுவதும்,  சட்டவிரோதமாக இங்கிருந்து கடத்தப்பட்டு கேரளமாநிலம் பத்தனம்திட்டா டயோசிஸூக்கு சொந்தமான நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும்  தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக  கேரளாவை சேர்ந்த பிஷப் மற்றும் 5 பாதிரியார்களை சிபிசிஐடி போலீசார்  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பத்தனம்திட்டா சிரோ மலங்கரா டயோசிஸின் பிஷப் சாமுவேல் மார் இரேனியோஸ் மற்றும் பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சாமகலா, ஜோஸ் களவியல் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருநெல்வேலியில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பாதிரியார்கள் தரப்பில், உடனே ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவர்களுக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களின் ஜாமின் மனுவை  நெல்லை குற்றவியல் நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

பாதிரியார்கள் மணல் கடத்லுக்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, வருவாய்த்துறை, சுரங்கம் மற்றும் காவல்துறை மற்றும் வேளாண்மைத் துறைகளைச் சேர்ந்த பல அதிகாரிகளின் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.பாதிரியாளர்களே மணல் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

மணல் கடத்தலில்  கத்தோலிக்க பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்கள் கைது
 

Tags : Catholic bishop and five priests arrested in sand smuggling

Share via