கைதான பாதிரியார் மீது 6 பிரிவுகளில் வழக்கு

by Staff / 07-04-2023 02:41:31pm
 கைதான பாதிரியார் மீது 6 பிரிவுகளில் வழக்கு

குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். புகாரில் பாதிரியாருடன் செல்போனில் சாட்டிங் செய்தேன். பின்னர் அவரது நடவடிக்கை பிடிக்காததால் ஒதுங்கி கொண்டேன். ஆனால் அவர் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாதிரியார் மீது சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

 

Tags :

Share via

More stories