தேமுதிக பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி அறிவிப்பு.

தேமுதிக உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கடிதம் அனுப்பியுள்ளார். தன்னை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். விடுவிக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சில நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். நல்லதம்பி முன்னாள் இளைஞரணி தலைவராக பதவி வகித்தவர் ஆவார்.
Tags : தேமுதிக பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி அறிவிப்பு.