தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.257 கோடியில் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. டெல்லியில் இருந்தபடி திமுக மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றனர். சென்னையில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags :