சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ஆய்வாளர்,அதிமுக பிரமுகர் -21 வரை நீதிமன்ற காவல்.

by Editor / 08-01-2025 10:17:27am
 சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ஆய்வாளர்,அதிமுக பிரமுகர் -21 வரை நீதிமன்ற காவல்.

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட இருவருக்கும் ஜன., 21 வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை முறையாக விசாரிக்க தவறியதாக பெண் காவல் ஆய்வாளர் ராஜி, வழக்கில் கைதான இளைஞருக்கு உதவிய அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளியாக கருதப்படும் சதீஸ் என்பவரை வழக்கில் இருந்து தப்பிக்க சுதாகர் உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

Tags :  சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ஆய்வாளர்,அதிமுக பிரமுகர் -21 வரை நீதிமன்ற காவல்.

Share via