இறைச்சி விற்பனை செய்யும் தொழிலதிபர்
சீனாவை சேர்ந்த டாங்ஜியன் என்பவர் உணவக தொழிலில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். 2005 ஆம் ஆண்டில், அவர் நிலப்பரப்பு பொறியியல் துறையில் அதிக முதலீடு செய்ததில் பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனது கார்கள், பங்களாக்கள் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் விற்க நேர்ந்துள்ளது. ஆனாலும் ரூ.52 கோடி கடன் நிலுவையில் இருந்துள்ளது. அவற்றை திருப்பி அடைக்க இறைச்சி சார்ந்த உணவுகளை விற்க ஆரம்பித்துள்ளார். ஹாங்சோவில் ஒரு தெருவில் கடை அமைத்துள்ள அவர் வாழ்க்கையில் சோதனைகளை எதிர்கொள்ளும் பலருக்கு உத்வேகமாக இருந்தார்.
Tags :