மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் ஒரு வாரத்திற்குள் பதில்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

by Admin / 06-10-2026 12:21:06am
மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் ஒரு வாரத்திற்குள் பதில்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பணியிடை நீக்கும் அல்லது பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோசி ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மற்றும் படிவம் ஆறு மாற்றம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மானு மீதான விசாரணையின் போது செய்தித்தாள்களில் வந்த அறிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒருதலை பட்சமாக தலைமை தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்ய முடியாது என்றும் இடைக்காலமாக அவரை நீக்கினால் தேர்தலை யார் நடத்துவது என்று கேள்வியையும் நீதிமன்றம் எழுதியதோடு சட்டத்திற்கு புறம்பாக தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அந்த முடிவுகளை நீதிமன்றம் ரத்து செய்ய தயங்காது என்றும் மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் ஒரு வாரத்திற்குள் பதில்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo