காவல்துறைக்கு அழுத்தம் இருக்கிறதா? - கிருஷ்ணசாமி கேள்வி
தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து விட்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கூலிப்படைகளை கையாள முடியாமல் காவல்துறை திணறுவது ஏன்? காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருக்கிறதா? தொடர் படுகொலைகளால் பொதுமக்களிடைய அச்ச நிலை உருவாகியிருக்கிறது. கூலிப்படையினர் யாராக இருந்தாலும் அவர்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
Tags :