வந்தது 5 வயதுடைய குழந்தைகளுக்கான நிமோகோகல் ஊசி!

by Admin / 13-08-2021 01:11:32pm
வந்தது 5 வயதுடைய குழந்தைகளுக்கான நிமோகோகல் ஊசி!

5 வயதுக்குட்பட்ட குழந்தைக்களுக்காக புனேவில் இருந்து சுமார் ஒரு லட்சம் நிமோகோகல் ஊசி மருந்து சென்னை வரவழைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூளை காய்ச்சல், நிமோனியா போன்ற நோய்களால் பாதிக்கப்படும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிமோகோகல் ஊசி மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழக அரசு  சார்பில் பல பகுதிகளில் இருந்தும் நிமோகோகல் மருந்த கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

 அதன்படி, புனேவில் இருந்து விமானம் முலம் 20 பெட்டிகளில் ஒரு லட்சம் நிமோகோகல் மருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளது.

இந்த மருந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

Tags :

Share via