அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கு அவசரகால முதலுதவி பயிற்சி

by Staff / 04-04-2023 12:18:56pm
 அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கு அவசரகால முதலுதவி பயிற்சி

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் அவசரகால முதலுதவி பயிற்சிஅளிக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு அவசரகாலமுதலுதவி பயிற்சி, ‘தமிழ்நாடு சுகாதார உயர்திறன் மேம்பாட்டு மையம்’ மூலம் டிஜிபி அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.இந்த பயிற்சியை டிஜிபி சைலேந்திரபாபு சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். முதல்நாள் பயிற்சியில் சென்னை, ஆவடி, மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்திலிருந்து 75 ஆண், பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.தமிழகத்திலுள்ள 1, 552 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு 13 பணியிடைப் பயிற்சிமையங்கள் மூலம் இப்பயிற்சி நடத்தப்படும். நிகழ்ச்சியில் சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சந்திரகுமார், டாக்டர் இர்பாணா ஷெராஜ் மற்றும் பயிற்சியாளர்கள் பாலசுப்ரமணி, நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via