குற்றாலம் பேரருவி,ஐந்தருவியில் வெள்ளம்  குளிக்க தடை.

by Editor / 04-09-2023 09:30:43am
குற்றாலம் பேரருவி,ஐந்தருவியில் வெள்ளம்  குளிக்க தடை.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம் வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதின் காரணமாக குற்றாலத்தில் சீசன் டல்லடித்தது மேலும் இரண்டு முறை ஏற்பட்ட புயல் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துக் கொட்டியதால் சுற்றுலா பயணி வருகையும் அதிகரித்து இருந்தது இந்த நிலையில் சாரல் மழை என்பது குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இல்லாத நிலை நீடித்து வந்தது இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக தென்மேற்கு பருவமழை தற்பொழுது மீண்டும் வலு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது இதன் தொடர்ச்சியாக குற்றாலம் வனப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு ஐந்தருவி மற்றும் குற்றாலம் பேரருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.இதன் தொடர்ச்சியாக  ஐந்தருவியல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது .இந்த நிலையில் 3 வது நாளான நேற்றும்  இரவில் மழையின் காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருவதால்  காலையில் அருவியில் நீர்வரத்து அதிகரித்து கொட்டி வரும் நிலையில்   மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழையின் தாக்கம் அதிகரித்ததால் குற்றாலம் பேரருவியில் நீர்வரத்து அதிகரித்து பாதுகாப்பு வளையத்தை தாண்டி  தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஐந்தருவியிலும் நீர்வரத்து அதிகரித்து கொட்டிவருவதால் அங்கும் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : குற்றாலம் பேரருவி

Share via