மகளிர் உரிமைத்தொகை - அமைச்சர் முக்கிய அறிவிப்பு
மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் முகாம்களில் மேல்முறையீட்டு அதிகாரியிடம் விண்ணப்பம் செய்யலாம் என்றும் மகளிர் உரிமைத்தொகைக்கான பிரத்யேக இணையதளத்திலேயே புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி, இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இதில் விண்ணப்பிக்க பயனர்களுக்கு எவ்வித எண்ணிக்கையும் நிர்ணயிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
Tags :



















