"பாலியல் குற்றவாளிக்கு ஓட்டு கேட்கும் மோடி" - ராகுல் கடும் தாக்கு

by Staff / 02-05-2024 05:25:03pm

பிரதமர் மோடி, 'பலாத்கார குற்றவாளி'க்கு ஓட்டு கேட்கிறார். நாட்டின் அனைத்து பெண்களையும் அவமதித்துள்ள நரேந்திர மோடி, இந்த செயலுக்காக நாட்டு பெண்களிடம் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரை பொது கூட்டத்தில் பேசிய அவர், பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை ஆபாச வீடியோக்கள் எடுத்துள்ளார்.‌ மேலும் நரேந்திர மோடி அந்த குற்றவாளியை மேடையில் ஆதரித்து ஓட்டு கேட்கிறார், "இந்தப் பலாத்காரனுக்கு வாக்களித்தால் அது எனக்கு உதவியாக இருக்கும்." என பேசினார்.

 

Tags :

Share via

More stories