திண்டிவனத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பாத்திர கடையை மேல் இடி தாக்கியது.

திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை திடீரென்று திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையாள் சாலைகளில் மழை நீர் உருண்டு ஓடியது. அப்போது திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள பாத்திர கடையினை இடி தாக்கியது.
அப்போது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் வெளியில் வந்து பார்த்த போது பாத்திரக்கடையின் மொட்டை மாடியில் உள்ள சுவர் சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. திண்டிவனத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாத்திரக்கடையின் மேல் இடி விழுந்ததசம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதில் யாருக்கு சேதம் ஏற்ப்படவில்லை.
Tags :