25-ம் தேதி முதல் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.

by Admin / 23-11-2021 09:50:45pm
 25-ம் தேதி முதல் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.

 

3-வது தாழ்வுப்பகுதி... 25-ம் தேதி முதல் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை...

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு   கனமழை பெய்யும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
ஏரி, குளங்கள் உள்பட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்க உள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரத் தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

Tags :

Share via

More stories