உலகை திரும்பிப் பார்க்க வைத்த எலோன் மஸ்க்

by Staff / 01-06-2023 01:44:21pm
உலகை திரும்பிப் பார்க்க வைத்த எலோன் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் டுவிட்டர் தலைவர் எலோன் மஸ்க் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த பெர்னால்ட் அர்னால்டு நிறுவனத்தின் பங்குகள் 2.6 சதவீதம் சரிந்தன. இதனால் அவர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். தற்போது, ​​அர்னால்டின் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர்கள், எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்கள். டெஸ்லா மற்றும் ஸ்பேசெக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளராகவும் எலோன் மஸ்க் உள்ளார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் சீனா சென்ற எலோன் மஸ்க் அங்கு தொழில் முதலீடுகள் பற்றி திட்டம் தீட்டியுள்ளார்.

 

Tags :

Share via