களவாணியோடு கூட்டணி வைத்த காவலர்கள் கைது.

by Editor / 29-12-2024 10:00:32pm
களவாணியோடு கூட்டணி வைத்த காவலர்கள் கைது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது வீட்டிலிருந்து, 11 சவரன் நகை,மற்றும்  1கிலோ 250 கிராம் வெள்ளி திருட்டு போனது. இதேபோன்று, சுரேஷ் என்பவர் வீட்டிலும் நகைகள் மற்றும் பணம் திருட்டு போனது. இது குறித்து நகைகளை பறிக்கொடுத்தவர்கள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் சூர்யா என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சூர்யா, நகைகளை திருடி காவலர்களான பாஸ்கரன், அப்துல் சலாம் ஆகியோரிடம் கொடுத்து அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து காவலர் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.
 

 

 

Tags : களவாணியோடு கூட்டணி வைத்த காவலர்கள் கைது.

Share via