கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அமோகம்... நடவடிக்கை எடுக்குமா காவல்துறை....
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.
சின்னசேலம் பகுதியில் உள்ள வானவரெட்டி, திம்மாபுரம், கல்லாநத்தம், தகரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், கச்சிராயப்பாளையம் பகுதியிலுள்ள கரடி சித்தூர், மாத்தூர், செல்லம்பட்டு ',மன்மலை, மட்டப்பாறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை வெளிப்படையாக படுஜோராக விற்பனை செய்யப்படுகிறது.
சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள உள்ளூர் காவல் நிலைய போலீசார் இதனைகண்டும் காணாமல் இருப்பதாக பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
Tags :