பாளையங்கோட்டை சிறையில்  கோழிஅருளை அனுமதிக்காததால் வேறுசிறைக்கு மாற்றம்.

by Editor / 03-11-2023 09:52:17pm
பாளையங்கோட்டை சிறையில்  கோழிஅருளை அனுமதிக்காததால் வேறுசிறைக்கு மாற்றம்.

நெல்லை மாவட்டம் அம்பை போலீசாரால் பெங்களூரில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கோழி அருளை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில்தில் இன்று மாலை போலீசார் ஆஜர் படுத்தினர். நீதிபதி ஆனந்தவல்லி கோழி அருளை15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.அதன்படி திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு போலீசார் அழைத்து சென்றனர்  ஆனால் அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக  பாளையங்கோட்டை சிறைச்சாலை  அதிகாரிகள் கோழி அருளை சிறைக்குள் அனுமதிக்கவில்லை. மேலும் சிறை அதிகாரிகளின் பரிந்துரையின்படி செங்கல்பட்டு மாவட்ட கிளைச்சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் போலீசார் கோழி அருளை அழைத்து செல்கின்றனர்.

 

Tags : பிரபல ரவுடி கோழி அருளை

Share via

More stories

Logo