பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி

by Editor / 29-04-2025 01:31:42pm
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி

மதுரை: கே.கே. நகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். 4 வயது சிறுமி ஆருத்ரா விளையாடிக் கொண்டிருந்த போது மூடப்படாமல் இருந்த 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
 

 

Tags :

Share via