பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், மே 13ல் தீர்ப்பு அளிக்கப்படும் என மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். இதனிடையே நீதிபதி நந்தினி தேவி உட்பட தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தீர்ப்பு தேதி மாற்றப்படுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் வழக்கில் தீர்ப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :