பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆறுதல்... பாலூட்டுவதால் தொற்று பரவாது...
கொரோனா பாதித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதால் தொற்று பரவாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பற்றி பேசிய டெல்லியில் உள்ள புகழ்பெற்ற லேடி ஹர்டிஞ்ச் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மஞ்சு பூரி, தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசியானது உடலில் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்குமே தவிர, திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், தொற்று பாதித்த தாய்மார்கள் முறையான பாதுகாப்புடன் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என தெரிவித்துள்ளார்.
ஆனால், பிற நேரங்களில் குழந்தையிடம் இருந்த தாய் 6 அடி இடைவெளியை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு, தொப்புள் கொடி பாதுகாப்பு படலமாக இருப்பதால், தாய் மூலம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
Tags :