முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது!

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நீக்குவதை கண்டித்து விழுப்புரத்தில் தர்ணா செய்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலையின் கீழ் அமர்ந்து சிவி சண்முகம் தர்ணா செய்தார். இதனால் சி.வி.சண்முகம் போலீசாரால் கைதானார்.இந்த சூழலில் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையில் கலைவாணர் அரங்கம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
Tags :