வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு

by Staff / 13-10-2024 03:36:13pm
வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (அக்.15) தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வங்கக்கடலில் நாளை அக்.14 உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பருவமழை தொடங்க காரணியாக அமைய உள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக். 21ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், இந்தாண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via