புளியறை சோதனைச் சாவடியில் வனத்துறை அதிகாரி வாகன ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

தமிழக- கேரளா எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள புளியரை சோதனை சாவடி வழியாக அண்டை மாநிலமான கேரளாவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இந்த கனரக வாகனங்கள் வாயிலாக
அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் எஸ்.வளைவு பகுதியில் வனத்துறையினர் கனரக வாகன ஓட்டுநர் இடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோவில் வனத்துறையினர் வாகன ஓட்டுநரை காட்டமாக பேசியதுடன் காவல்துறையினருக்கு மட்டும் லஞ்சம் கொடுக்கப்பட்டு வருகிறது எங்களுக்கும் அதே மாதிரி தர வேண்டும் எனவும் வாகனத்தில் ஏற்றிச் செல்லக்கூடிய பொருட்களுக்கு தகுந்தவாறு பணத்தை தர வேண்டும் என பேரம் பேசி உள்ளார்.
இது குறித்தான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு மாடு வைக்கோல் உள்ளிட்டவை கொண்டு சென்றாலும் இங்கு பணம் கொடுத்துவிட்டு தான் செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது அதேபோன்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு கேரள மாநிலத்திற்கோ மரத்தடிகள் கொண்டு சென்றாலும் இவர்கள் மாமுல் வாங்குவது வழக்கமாக இருந்து வருகின்றது இதேபோன்று கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் மரத்தடியில் ஏற்றி வரும் வாகனங்களிடம் புலியரை சோதனை சாவடியிலும் செங்கோட்டை வனத்துறை சோதனைச் சாவடியிலும் வசூல் செய்வது வழக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags : புளியறை சோதனைச் சாவடியில் வனத்துறை அதிகாரி வாகன ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு