அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் கிடங்குகளில் இந்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் (BIS) சோதனைபோலி பொருட்கள் பறிமுதல்.

by Editor / 20-03-2025 08:22:57pm
அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் கிடங்குகளில் இந்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் (BIS) சோதனைபோலி பொருட்கள் பறிமுதல்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் கிடங்குகளில் இந்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் (BIS) சோதனை நடத்தினர். சான்று இல்லாத பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில், ரூ.36 லட்சம் மதிப்புள்ள 3,376 போலி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ப்ளாஸ்க்குகள், உணவு டப்பாக்கள், குடிநீர் பாட்டில்கள், மின் விசிறி, பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். இந்த பொருட்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும். பொதுமக்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது BIS சான்று உள்ளதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் கிடங்குகளில் இந்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் (BIS) சோதனைபோலி பொருட்கள் பறிமுதல்.

Share via