2026 மார்ச் 31க்குள் நக்சல் இல்லா நாடாக இந்தியா மாறும் - அமித்ஷா உறுதி.

by Editor / 20-03-2025 08:20:39pm
2026 மார்ச் 31க்குள் நக்சல் இல்லா நாடாக இந்தியா மாறும் - அமித்ஷா உறுதி.

22 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை 2026 மார்ச் 31க்குள் நக்சல் இல்லா நாடாக இந்தியா மாறும் - அமித்ஷா உறுதி.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில்ரிசர்வ் போலீஸ் படைக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில்  ரிசர்வ் போலீஸ் படை துப்பாக்கியால் சுட்டதில் 22 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்தனர்.  ரிசர்வ் படை போலீஸ் ஒருவரும் உயிரிழந்தார்.


இந்த சம்பவம் குறித்து பதிவு செய்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2026 மார்ச் 31க்குள் நக்சல் இல்லா நாடாக இந்தியா மாறும் என்று உறுதி அளித்துள்ளார். 

சத்தீஸ்கர் அருகே 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமித்ஷா பதிவு செய்துள்ளார்.
 மோடி அரசு நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. 
 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நாடு நக்சலைட்டுகளிலிருந்து விடுபடும் என கூறியுள்ளார்.

 

Tags : 22 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

Share via