மோப்ப நாய்களின் பயிற்சிக்காக வைத்திருந்த கஞ்சாவை பயன்படுத்திய 3 காவலர்கள் பணி இடைநீக்கம்
புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் மோப்ப நாய் பிரிவு இயங்கி வருகின்றது. அங்குள்ள மோப்ப நாய்களுக்கு கொலை,கொள்ளை, மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாடு ஆகியவற்றை கண்டுபிடிக்க பயிற்சி கொடுப்பதற்காக தனித்தனியாக காவலர்கள் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், போதைப்பொருள் பயன்பாட்டை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினரால்மோப்ப நாய் பயிற்சிக்காக கொடுக்கப்பட்டிருந்த கஞ்சாவை மோப்ப நாய் பயிற்சி பிரிவில் பணியாற்றும் காவலர்கள் சேவியர் ஜான்சன், பழனிசாமி, அஸ்வித் ஆகிய மூன்று காவலர்களும் தங்களுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து விசாரணையில் மூன்று காவலர்களும் பயன்படுத்தியது உறுதி செய்யபட்ட நிலையில் 3 காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

