5 பேர் படுகொலை.. கொலையாளி அளித்த பகீர் வாக்குமூலம்

கேரளாவை உலுக்கிய 5 பேர் படுகொலை சம்பவத்தின் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரம் வெஞ்சாரமூடு பகுதியில் தம்பி, காதலி, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா ஆகியோரை நேற்று முன்தினம் அஃபான் (23) என்ற இளைஞர் சுத்தியலால் தாக்கியும், வெட்டியும் கொன்றார். முதல் 3 கொலைகள் செய்த பின், மதுக்கடைக்கு சென்று மது அருந்தி ஓய்வு எடுத்துள்ளார். போதை தெளிந்ததும் மற்ற இருவரை கொன்றுள்ளார். கைதான அஃபானுக்கு உளவியல் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Tags :