நம் பூமி மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க கூடாது உயர்நீதிமன்றம்
நம் பூமி மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிம பொருள் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்கக் கோரி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த36 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
அதன் மீதான விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திர வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என கூறினார்.
இயற்கை வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு தேவைப்படும் என தெரிவித்த நீதிபதி ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முடக்கம் செய்யும் நடவடிக்கைகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Tags :